Last updated:
ஸ்ரீ அரவிந்தர்: அவரது அகக்காட்சி ஆரோவில்லை சாத்தியமாக்கியது
ஸ்ரீ அரவிந்தரின் உலகக் கண்ணோட்டம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு முற்போக்கான அண்ட வெளியில் ஒரு அர்த்தமுள்ள இடத்தை அளிக்கிறது மற்றும் மனித முயற்சியைப் பற்றிய நமது புரிதலை ஒரு புதிய மற்றும் நோக்கமுள்ள கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது.
சிறந்த அறிஞர், புரட்சியாளர், ஆன்மீக தீர்க்கதரிசி...
ஸ்ரீ அரவிந்தரின் உலகக் கண்ணோட்டம் ஒவ்வொரு நபருக்கும் முன்னேற்றமான பிரபஞ்ச வெளியில் ஓர் அர்த்தமுள்ள இடத்தை அளிக்கிறது மற்றும் மனித முயற்சியைப் பற்றிய நமது புரிதலை ஒரு புதிய மற்றும் நோக்கமுள்ள கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது.
மேற்கத்திய கல்வி
அரவிந்த் கோஸ் 1872ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். அவர் 78 ஆண்டு காலம் வாழ்ந்தார். 1950 டிசம்பர் 5 அன்று பாண்டிச்சேரியில் அவர் இவ்வுலகவாழ்க்கையை விட்டு நீங்கினார்.
அவரது இரண்டு சகோதரர்களுடன் இங்கிலாந்தில் முழுமையாகக் கல்வி கற்ற அவர், அவர்களின் ஆங்கிலப் பண்பார்வமிக்க தந்தையால் முற்றிலும் மேற்கத்திய கல்வியைப் பெற்றார். டார்ஜிலிங்கில் உள்ள ஒரு கான்வென்ட்டில் குழந்தைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு, அவர்கள் மான்செஸ்டரில் ஒரு மதகுரு குடும்பத்துடன் வாழ இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் பொதுப் பள்ளியில் சேர்ந்தனர், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஒரு சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார், கிளாசிக்கல் டிரிபோஸ் தேர்வில் சாதனை மதிப்பெண்களை வென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இந்தியாவின் சுதந்திரத்திற்கான விருப்பத்தில் நாட்டம் கொண்டிருந்தார். மேலும் காலனித்துவ நிர்வாகத்தின் அதிகாரியாக மாற விரும்பவில்லை - அவரது தந்தை மற்றும் அவரது கல்வி மூலம் அவருக்குக் கிடைத்த பதவி. கட்டாய குதிரையேற்றத் தேர்வில் வேண்டுமென்றே அவர் தோல்வியுற்று, அவர் தன்னைத்தானே தகுதி நீக்கம் செய்து கொண்டார். அதற்குப் பதிலாக 1893-இல் இந்தியாவுக்குத் திரும்பினார், இந்திய சமஸ்தானமான பரோடாவில் 1906 வரை அவர் பணியாற்றினார்.
தேசியவாத தலைவர்
அந்த ஆண்டில் தமது பிறந்த இடமான கொல்கத்தாவுக்குத் திரும்பினார், அங்கு அவர் புதிய வங்காள தேசிய கல்லூரியின் முதல் முதல்வராகப் பணியாற்றினார். அவர் தேசியவாத இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காரணமாக அந்தப் பதவியை இராஜினாமா செய்தார். அந்த இயக்கத்தின் குறிக்கோளாக இந்தியாவிற்கு முழுச் சுதந்திரத்தை வலியுறுத்திய தேசியவாத தலைவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ அரவிந்தர் ஆவார். மேலும் பல ஆண்டுகளாக அவர் இந்த போராட்டத்திற்கு தமது கணிசமான திறன்கள் மற்றும் ஆற்றல்கள் அனைத்தையும் வழங்கினார். இதனால் அவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, அலிப்பூர் சிறையில் 'விசாரணையின் கீழ்' கைதியாக கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். இந்த நேரத்தில், அவருக்கு பல அடிப்படை ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தன, இது இந்தியாவின் பண்டைய ஆன்மீக அறிவு மற்றும் நடைமுறையான "சனாதன தர்மத்தின்" உண்மையை அவருக்கு உணர்த்தியது.
பாண்டிச்சேரி
அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலையானார். எனினும், பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்தம் ஆன்மீக விழிப்புணர்வு அவரை பிரஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டிச்சேரியில் தஞ்சம் அடைய வழிவகுத்தது, அங்கு அவர் தமக்குத் திறந்த புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் தீவிரமாக தம்மை அர்ப்பணித்தார். அவரது ஆன்மீக ஒத்துழைப்பாளரான அன்னையின் ஆதரவுடன், அவர் புதிதாகக் கண்டறிந்த ஆன்மீகத் திறன்களைப் பயன்படுத்தி, இந்தியா மற்றும் உலகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து அயராது உழைத்தார். 15.8.1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அவர்தம் இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை அளித்தார், அப்போது அவர் தமது ஐந்து கனவுகளைப் பற்றி பேசினார். அவை இப்போது நிறைவேறும் வழியில் செல்வதாக அவர் கண்டார்.
ஐந்து கனவுகள்
1. இந்தியாவிற்கு சுதந்திரத்தையும் ஒற்றுமையயையும் அளிக்கும் புரட்சிகரமான இயக்கம்.
2. ஆசியா மறுமலர்ச்சி அடைந்து, விடுதலை பெற்று, தொன்றுதொட்டு மனித நாகரிகத்திற்கு பெரிதும் உதவியது போல மீண்டும் உதவுதல்.
3. மனிதஇனம் முழுவதும் புதிய, பரந்த, ஒளிபொருந்திய, சிறந்த வாழ்வு பெறுதல். அது முற்றிலும் நிறைவேறுவதற்கு உலகின் பல்வேறு மனித இனங்களும் ஒன்றுபடுதல், அதேநேரம் ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மை கொண்ட தேசிய வாழ்வும் பாதுகாக்கப்படுதல். மனிதகுல ஒருமைப்பாட்டு உணர்வு வலுவாகச் செயலாற்றி அவற்றை ஒன்றாகப் பிணைத்தல்.
4. இந்தியா ஆன்மிக ஞானத்தையும் வாழ்வை ஆன்மிக மயமாக மாற்றும் வழிமுறைகளையும் உலகிற்குக் கற்பித்தல்.
5. இறுதியாக பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அடி எடுத்து வைத்தல். அதன்மூலம்
உணர்வு ஓர் உயர்நிலைக்கு உயர்ந்து செல்லுதல்.
நம்பிக்கையான மற்றும் ஆற்றல்மிக்க உலகக் கண்ணோட்டம்
ஸ்ரீ அரவிந்தரின் சிறந்த அசல் தன்மை, பரிணாம வளர்ச்சியின் நவீன விஞ்ஞானக் கருத்தை, அனைத்து தனித்துவமான இருப்புகளையும் ஆதரிக்கும் அனைத்து வியாபித்திருக்கும் தெய்வீக உள்ளுணர்வின் வற்றாத ஞான அனுபவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவரது தொகுப்பு ஒரு தத்துவக் கட்டமைப்பாக இல்லை, ஆனால் நேரடி ஆன்மீக அனுபவத்திலிருந்து உருவான ஒரு அனுபவஞானம் ஆகும். மேன்மேலும் சிக்கலான வடிவங்களில் வெளிப்படுதல் மற்றும் ஒரு அசல் மொத்த பருப்பொருள் சுயநினைவின்றி உயர் உள்ளுணர்வு நிலையின் விழிப்புணர்வுபடிப்படியாகத் திரும்புவதாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட ஆன்மாவின் மாறுபட்ட சுய வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. இந்த செயல்முறை வெளிப்படையாக முழுமையடையவில்லை,மேலும் உயர் உள்ளுணர்வு நிலையின் பரிணாமம் மற்றும் குறைவான உணர்வுநிலையற்ற வடிவங்களின் வெளிப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெருமனதின் வளர்ச்சியுடன், தனிப்பட்ட மனிதர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்தால், தங்கள் விருப்பத்தையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி சுய-கண்டுபிடிப்பு மற்றும் சுய-ஆராய்வு செயல்முறையில் உணர்வுபூர்வமாக பங்கேற்கத் தொடங்கலாம். இந்த அறிவு ஒரு நம்பிக்கையான மற்றும் ஆற்றல்மிக்க உலகக் கண்ணோட்டத்தைக் கண்டறிந்துள்ளது, இது ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு முன்னேற்றமான பிரபஞ்ச வெளிப்படுதலில் ஒரு அர்த்தமுள்ள இடத்தை அளிக்கிறது, மேலும் மனித முயற்சியைப் பற்றிய நமது புரிதலை, தனிமனிதனாகவோ அல்லது கூட்டாகவோ, ஒரு புதிய மற்றும் நோக்கமுள்ள கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது. இந்த உலகக் கண்ணோட்டத்தின் பல அம்சங்கள் ஸ்ரீ அரவிந்தரின் நூல்தொகுப்பின் 35 தொகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன.