Last updated:
மாத்ரிமந்திரைப் பார்வையிடுதல் (Visiting the Matrimandir)
மாத்ரிமந்திர் ஒரு “சுற்றுலாத்தளம்” அல்ல என்பதை பார்வையாளர்கள் மற்றும்
விருந்தினர்கள் நினைவில் கொள்ளவேண்டும்; மாத்ரிமந்திர், ஒருவர் அமைதியாக மனத்தை
ஒருமுகப்படுத்தும் இடம் ஆகும். நல்ல மனநிலை மற்றும் உடல்நிலை உள்ளவர்கள்
பார்வையிடுவதற்குரிய இடமாகும்.
மாத்ரிமந்திரை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பார்வையிடலாம். மாத்ரிமந்திர் அனுமதிச்சீட்டு பெற முகவர், வழிகாட்டுநர் அல்லது சுற்றுலா நடத்துநர் மூலம் முன்பதிவுகள் செய்யமுடியாது.
மாத்ரிமந்திர் பற்றிய பொதுத்தகவல்களை பார்வையாளர்கள் மையத்தின் (விசிட்டர்
சென்டரில்) தகவல் மையத்தில் காலை 9 –
1 மணிவரை மற்றும் பிற்பகல் 1.30
– 5 மணிவரை பெறலாம். அறிமுகப் படக்காட்சி பல்வேறு மொழிகளில் காண்பிக்கப்படுகிறது.
மாத்ரிமந்திரை வெளியில் இருந்து பார்வையிடுதல்
மாத்ரிமந்திர் வியூவிங் பாய்ண்ட், ஒற்றுமை பூங்காவின் தெற்கே அமைந்துள்ளது,
இங்கே மாத்ரிமந்திர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் அழகைக் கண்டுரசிக்க ஒரு
தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மாத்ரிமந்திர் பற்றிய குறும்படத்தை பார்த்த பின்னர், மாத்ரிமந்திர் வியூவிங் பாயிண்ட் செல்வதற்கான அனுமதிச்சீட்டு ஆரோவில் பார்வையாளர்கள்
மையத்தில் (விசிட்டர் சென்டர்) இலவசமாக வழங்கப்படும்.பார்வையாளர்கள் மையத்தில் (விசிட்டர் சென்டர்) அனுமதிச்சீட்டு வழங்கப்படும்
நேரம்:
திங்கள் – சனி : காலை 9 மணி
- பிற்பகல் 4.00
மணி வரை.ஞாயிறு: காலை 9.00 – 1 மணிவரை மட்டுமே, பிற்பகல் மூடப்படும்.
மாத்ரிமந்திர் வியூவிங் பாயிண்ட் செல்வதற்கான வழி:
பார்வையாளர்கள்
மையத்திலிருந்து வியூவிங் பாயிண்ட் செல்ல 10 -12 நிமிடங்கள் மரங்களின் நிழலில் நடந்து
செல்லவேண்டும். நடக்க சிரமப்படுபவர்களுக்கு இலவச மின்சார வேன் வசதி உள்ளது. நடந்து
செல்பவர்கள் போக 1 கி.மீ. தூரமும், திரும்பி வர 1 கி.மீ. தூரமும் நடக்கவேண்டும். வியூவிங்
பாயிண்டிலிருந்து பார்வையாளர்கள் மையத்திற்கு (விசிட்டர் சென்டர்) திரும்பி
வரும்போது விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் வசதி உள்ளது.
உங்களுக்கு இன்னும்
சிறிது நேரம் இருந்தால், ஆரோவில்லின் மற்ற அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ள
விரும்பினால், விசிட்டர் சென்டருக்குத் திரும்பி வரும் வழியில் சாவித்ரி பவன், ஒருமை
அரங்கம் (யூனிட்டி பெவிலியன்), திபெத்தியன் அரங்கம் (பெவிலியன்), இனுக்சுக் போன்ற
சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று பார்க்கலாம். (இதற்கு 2 மணி நேரம் ஆகும்).
மாத்ரிமந்திர் உள்அறைக்கு முதல் தடவையாகச் செல்லுதல்
·
மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்தச் செல்வதற்கு, குறைந்தபட்சம் ஒருநாளுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யவேண்டும்.
·
அனைத்து முன்பதிவுகளும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, ஒரு நபர் நேரடியாக வந்தால் மட்டுமே பதிவு செய்யப்படும் (முதல் தடவையாக மனத்தை ஒருமுகப்படுத்த வரும் நபருக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய இயலாது).
·
குழுக்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி கிடையாது.
·
முன்பதிவுகள்
எப்போதும் காலியாக உள்ள முதல் நாளில் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில், மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதாக செய்யப்படும்.
·
முதல் தடவையாக
மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்த செல்வதற்கு முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்களுக்கு மாத்ரிமந்திர் பற்றிய ஒரு அறிமுகம் அளிக்கப்படும். மாத்ரிமந்திர் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கப்படும்.
அதைத்தொடர்ந்து உள்அறையில் 10–15
நிமிடங்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தலாம்.
”மாத்ரிமந்திர்” பற்றிய 10 நிமிட
அறிமுக வீடியோவை ஒருவர் பார்த்த
பின்பு, செவ்வாய் தவிர மற்ற நாட்களில்
காலை 10 -11 மணிக்கு அல்லது
பிற்பகல் 2 – 3 மணிக்கு,
அவரே
நேரடியாக பார்வையாளர் மையத்திற்கு வந்து (விசிட்டர் சென்டர்) முன்பதிவு செய்யவேண்டும்.
மாத்ரிமந்திரில் முன்னதாகவே மனத்தை ஒருமுகப்படுத்திய பார்வையாளர்களுக்கு
ஏற்கனவே மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்திய வழக்கமான பார்வையாளர்களுக்கு மற்றும் முன்னரே மாத்ரிமந்திரில் மனத்தை
ஒருமுகப்படுத்தியவர்களுக்கு (மேலே பார்க்கவும்).
உள்அறை மற்றும் இதழ்கள் தியான
அறையில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு ஒவ்வொருமுறையும் முன்பதிவு செய்யவேண்டியது
அவசியம். முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
·
செவ்வாய்க்கிழமைத் தவிர மற்ற நாட்களில் காலை 10- 11.30 மணிக்கு (0413) 2622204 என்ற
எண்ணைத் தொடர்புகொள்ளவும் அல்லது
·
mmconcentration@auroville.org.in மின்னஞ்சல் மூலம் மூன்று நாட்களிலிருந்து 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யவேண்டும். இம்முறையில்
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்பதிவு எண்
மற்றும் விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
உள்அறையில்
மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான நேரம்
·
காலை
9.30
– 10.05 மணி.
·
உள்அறைக்கு
செல்ல கடைசியாக அனுமதிக்கப்படும் நேரம்: காலை 9.45 மணி
இதழ்
தியான அறை ஒன்றில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான நேரம்
· காலை 9.30 – 10.45 மணி
· வழக்கமாக இதே நேரத்தில் 12
தியான அறைகளும் திறந்திருக்கும், ஆனால் குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில மட்டுமே
திறந்திருக்கும்.
· ஒரு நாளைக்கு ஒரு தியான
அறைக்கு மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
பொது நிபந்தனைகள்
ஸ்ரீ அன்னையின்
வழிக்காட்டுதல்களின் அடிப்படையில் மாத்ரிமந்திரின் உள்ளே செல்வதற்கான கொள்கை.
·
ஸ்ரீ அன்னையின் அகக்காட்சி,
ஆரோவில் திட்டம், மாத்ரிமந்திர் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, அங்கு
காண்பிக்கப்படும் வீடியோவையும், அங்குள்ள கண்காட்சியையும் பார்த்தவர்களுக்கு
மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆரோவில் பார்வையாளர் மையத்திற்கு முதல்முறையாக
வரும்போது இவற்றை செய்திருக்கவேண்டும்.
·
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே,
வேண்டுகோள் விடுத்து முன்பதிவு செய்யமுடியும். அந்த வேண்டுகோள்கள் வரிசைக்கிரமாகக்
கவனிக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படுகிறது. உள்அறைக்கு செல்வதற்கான இடங்களின்
எண்ணிக்கை குறைவாகும்.
·
முன்பதிவு செய்யப்பட்ட நாளில், முன்பதிவு செய்தவர்கள் பார்வையாளர்
மையத்திற்கு கண்டிப்பாக 9 மணிக்கு முன்னர் வரவேண்டும். அங்கிருந்து மாத்ரிமந்திருக்கு ஆரோவில்லின் மின்சார
வேன் மூலம் அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.
·
மாத்ரிமந்திருக்கு மின்சார வேனில் அழைத்து செல்லும் முன், முன்பதிவு செய்யப்பட்ட
நாளில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
·
மாத்ரிமந்திர் தோட்டங்களிலுள்ள ஒருமை பூங்காவிற்கு (Park
of Unity) தோள்பை, கேமரா மற்றும் செல்போன்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி
இல்லை. பார்வையாளர்கள் தங்கள்
உடைமைகளை பாதுகாக்க தாமே ஏற்பாடு செய்து கொள்ளலாம், அல்லது மாத்ரிமந்திருக்குள்
செல்ல அனுமதி வழங்கும் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டும் செல்லலாம். எனினும், அந்த
அலுவலகத்தில் வைக்கப்பட்ட பொருளின் சேதத்திற்கு அல்லது இழப்பிற்கு மாத்ரிமந்திர் நிர்வாகம் பொறுப்பேற்காது.
செல்போன்களை கொடுக்கும் முன்பு அணைத்து விடவும் (ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்).
·
விலையுயர்ந்த பொருள்களை தங்களுடன் கொண்டு வரவேண்டாம் என பார்வையாளர்களை
கேட்டுக்கொள்கிறோம்.
·
ஒருமைப் பூங்காவிற்கு வெளியே புகைப்படங்கள்
எடுப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே புகைப்படங்கள் எடுக்கலாம்.
·
ஊடகவியலாளர்கள் புகைப்படம்/படம் எடுக்க விரும்பினால் முன்னதாகவே outreachmedia@auroville.org.in இலிருந்து அனுமதி பெறவேண்டும்.
·
தூய்மை: மாத்ரிமந்திர் மற்றும் 12 இதழ்களை தூய்மையாக
வைத்திருக்க உங்களது ஒத்துழைப்பு தேவை.
மாத்ரிமந்திருனுள் மேற்புறத்தில் எதையும் தொடுவதற்கு
அனுமதி இல்லை. உடலும் உடையும் தூய்மையாக இருப்பது இன்றியமையாதது.
·
10 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் ஒருமைப் பூங்கா மற்றும் மாத்ரிமந்திரிக்குச்
செல்ல அனுமதி கிடையாது. குழந்தைகளை குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்வையாளர்
மையத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும்.
·
மாத்ரிமந்திர், 12 இதழ்களில் உள்ள தியான அறைகள், மாத்ரிமந்திருக்கு கீழேயுள்ள தாமரைக்குளம், ஆலமரத்தின்
கீழேயுள்ள பகுதி ஆகிய அனைத்து இடங்களிலும் ழுழு
அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். இந்தச் சூழலை எப்போதும் உயர்ந்த நிலையில்
வைத்திருக்க தாங்கள் எங்களுக்கு உதவவும்.
·
மழையின் காரணமாக அல்லது நடைப்பாதை மற்றும் தோட்டங்கள்
சேறாக இருந்தால்,
மாத்ரிமந்திர் மூடப்படும், மற்றும் அன்றைய தினத்தின் அனைத்து முன்பதிவுகளும்
இரத்து செய்யப்படும்.
·
மனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக முன்பதிவு செய்தவர்கள் அனைவரும், அந்நாளில்
ஆரோவில் பார்வையாளர் மையத்திற்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும்
·
பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை பார்வையாளர் மையத்தின் வாகனம்
நிறுத்துமிடத்தில் நிறுத்தும்படிக் கேட்டுக்கொள்கிறோம். மாத்ரிமந்திர் செல்வதற்கு
இலவச வாகன வசதி உள்ளது.
·
மாத்ரிமந்திரிலிருந்து பார்வையாளர் மையத்திற்கு கடைசி வாகனம் காலை 11.30 மணிக்கு திரும்பும்.
·
தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.
·
குடிபோதையில் இருப்பவர்கள்,
10 வயதுக்கு கீழுள்ளவர்கள், அனுமதியில்லாமல் ஆடியோ ஒலிப்பதிவு செய்தல், வீடியோ படங்கள்
அல்லது புகைப்படங்கள் எடுத்தல், அல்லது மேலே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள்
அல்லது மாத்ரிமந்திர், ஆரோவில்லின் இலட்சியங்கள் மற்றும் உணர்வுகளுக்கு
இணக்கமில்லாதவர்களை மாத்ரிமந்திருக்கு செல்ல அனுமதி மறுப்பதற்கும், உள்செல்வதற்கான அனுமதியை இரத்து செய்வதற்கும்
அல்லது ஒருமைப் பூங்காவில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கும் மாத்ரிமந்திருக்கு
உரிமை உண்டு.
·
முன்னறிவிப்பு இல்லாமல் மாத்ரிமந்திர் நிர்வாகம் மேற்கண்ட நேரம் மற்றும் நடைமுறைகளை
மாற்றியமைக்கலாம். ஆரோவில் மற்றும் மாத்ரிமந்திர் பற்றிய அண்மையத் தகவல்களை, தயவுசெய்து
இணையத்தளத்தில் காணவும்.